நேற்று சனிக்கிழமை இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாஹு (Netanyahu) திடீரென இஸ்ரேல் Somaliland ஐ ஒரு நாடாக ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். Somaliland ஐ ஒரு நாடாக ஏற்றுக்கொள்வது இஸ்ரேல் மட்டுமே. ஏன் இந்த திடீர் அறிவிப்பு?
1990 களில் சோமாலியா (Somalia) உள்நாட்டு, வெளிநாட்டு குழப்பங்களால் அழிவுற்று ஆட்சி செய்ய முடியாத நாடு ஆனபின் 1991ம் ஆண்டு வடக்கே உள்ள இதன் ஒரு பகுதி Somaliland என்று பிரிந்து திடமான ஆட்சி அமைத்து, தேசிய கொடி கொண்டு, சொந்த நாணயத்தை அறிமுகம் செய்து இயங்க ஆரம்பித்தது. ஆனாலும் இது ஐ.நாவில் ஒரு நாடு அல்ல.
காசா பலஸ்தீனரை somaliland க்கு தள்ளிவிட இஸ்ரேல் முன்னர் திட்டம் கொண்டிருந்தது. அப்போது அதற்கு அமெரிக்க சனாதிபதி ரம்பின் ஆதரவும் இருந்தது. ஆனால் அச்செயல் war crime ஆகும் என்பதை உணர்ந்த ரம்ப் பின்னர் தனது ஆதரவை மெல்ல கைவிட்டு இருந்தார்.
ஆனாலும் இஸ்ரேல் அந்த முயற்சியை தற்போதும் தொடர்வதாகவே கருதப்படுகிறது.
சனிக்கிழமை பெருமளவு ஆபிரிக்க நாடுகள் உட்பட 20 க்கும் மேற்பட்ட நாடுகள் இஸ்ரேலின் நகர்வை கண்டித்து உள்ளன.
ஐரோப்பிய ஒன்றியமும் சனிக்கிழமை இஸ்ரேலின் நகர்வை கண்டித்து உள்ளது. முழு சோமாலியாவின் இறமையை தாம் மதிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.
சீனாவும் இஸ்ரேலின் Somaliland நகர்வை கண்டித்து உள்ளது.
திங்கள் ஐ.நா. security council கூடி இஸ்ரேல் நகர்வு தொடர்பாக உரையாட உள்ளது.
