2015ம் ஆண்டு அளவில் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் உதவிகளுடன் யெமெனில் (Yemen) ஈரான் சார்பு Houthis மற்றும் அல்கைடா ஆயுத குழுக்களை ஒழிக்க வந்த சவுதியும், UAE யும் தற்போது தம்முள் மோதிக்கொள்கின்றன.
தற்போது அங்கே மேற்கு நாடுகளின் ஆதரவுடன் உள்ள ‘மத்திய’ அரசு சவுதியின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் Southern Transitional Council (STC) என்ற ஆயுத குழு UAE யின் ஆதரவில் யெமனின் கிழக்கு பகுதியை ஆள்கிறது. STC குழுவை சவுதி எதிர்க்கிறது.
செவ்வாய்க்கிழமை UAE இரண்டு கப்பல்களில் யெமனின் கிழக்கு பகுதிக்கு சில பொருட்களை எடுத்து சென்றது. அவை STC குழுவுக்கு வழங்கப்படும் ஆயுதங்கள் என்று கூறி அவற்றை அழிக்க சவுதி இராணுவ தாக்குதல் செய்தது.
இதனால் விசனம் கொண்ட UAE தாம் உடனடியாக தனது படைகளை யெமனில் இருந்து வெளியேற்றுவதாக கூறியுள்ளது.
சவுதிக்கும், UAE க்கும் இடையில் ஏற்பட்டுள்ள புதிய முறுகல் வளைகுடா பகுதியில் புதியதோர் நெருக்கடிகையை ஏற்படுத்தி உள்ளது.
