இஸ்ரேல் கவச வாகனங்களை குண்டுகளாக்கி காசாவை அழித்தது 

இஸ்ரேல் கவச வாகனங்களை குண்டுகளாக்கி காசாவை அழித்தது 

இஸ்ரேல் தன்னிடம் இருந்த M113 வகை பழைய Armoured Personnel Carriers (APC) கவச வாகனங்களுள் வெடி மருந்துகளை நிரப்பி, வெடிக்க வைத்து காசாவை அழித்தது என்று Reuters செய்தி நிறுவன ஆய்வுகள் அறிந்துள்ளன. 

இந்த தாக்குதல்கள் யுத்த நிறுத்தம் வர உள்ளது என்பதை அறிந்து அதற்கு சில தினங்கள் முன்னர் பெருமளவில் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த APC களுள் 1 முதல் 3 தொன் வெடிமருந்தை நிரப்பி வெடிக்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அலுமினியத்தால் செய்யப்பட்ட இந்த APC குண்டுகள் 200 முதல் 600 மீட்டர் விட்ட இடத்துக்கு பாரிய அழிவை ஏற்படுத்தும். உடைந்த பாகங்கள் 500 முதல் 1,000 மீட்டர் தூரம் வீசப்படும்.

இவ்வகை குண்டு அமெரிக்காவின் 2,000 இறாத்தல் எடை கொண்ட Mark 84 குண்டுகளுக்கு நிகரான அழிவை ஏற்படுத்த வல்லது. 

இவ்வாறு பொதுமக்கள் கட்டுமானங்களை திட்டமிட்டு அழிப்பது war crime ஆகும் என்று Ajith Sunghay என்ற ஐ.நா. உரிமைகள் அதிகாரி கூறியுள்ளார்.