சுவிற்சலாந்தின் Crans-Montana என்ற நகரத்து Le Constellation என்ற ski (பனியில் வழுக்கும் மலை பகுதி) நிலையத்தில் இரவு 1:30 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்துக்கு பல டசின் பேர் பலியாகியும், 100 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர்.
சுமார் 40 பேர் வரை இறந்து இருக்கலாம் என்று ஒரு அதிகாரி கூறியுள்ளார். அத்துடன் வெளிநாட்டவர் சிலரும் பலியாகி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
2026 புத்தாண்டை கொண்டாடிய பெரும்பாலும் 16 வயதுக்கும் 26 வயதுக்கும் இடைப்பட்டோரே பலியாகியும், காயமடைந்தும் உள்ளனர். தீ எவ்வாறு ஆரம்பித்தது என்று இதுவரை அறியப்படவில்லை.
எல்லை நாடான இத்தாலி தனது வைத்தியசாலைகளையும் பயன்படுத்த கேட்டுள்ளது.
இது ஒரு பயங்கரவாத செயல் அல்ல என்றும் அதிகாரிகள் கருதுகின்றனர்.
