​வெனிசுஏலாவை தாக்கி சனாதிபதியை அமெரிக்கா கைப்பற்றியது 

​வெனிசுஏலாவை தாக்கி சனாதிபதியை அமெரிக்கா கைப்பற்றியது 

சனிக்கிழமை ​வெனிசுஏலா (Venezuela) என்ற தென் அமெரிக்க நாட்டை தாக்கிய அமெரிக்க படைகள் அந்த நாட்டின் சனாதிபதி மடுரோவை (Maduro) கைப்பற்றி வேறு நாடு ஒன்றுக்கு கடத்தி உள்ளதாக அமெரிக்க சனாதிபதி ரம்ப் கூறியுள்ளார். ரம்பி மேலதிக அறிவிப்பை நியூ யார்க் நேரப்படி சனி காலை 11:00 செய்வார் சென்றும் கூறப்படுகிறது.

அமெரிக்க Attorney General ​வெனிசுஏலா சனாதிபதி மீது அமெரிக்காவில் போதை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மடுரோவும் அவரின் மனைவியும் எங்கே உள்ளார்கள் என்று தமக்கு தெரியாது என்று ​வெனிசுஏலா உதவி சனாதிபதி கூறியுள்ளார்.

​முன்னர் ​வெனிசுஏலா நுழைந்த CIA மருடோவின் இருப்பிடத்தை அறிந்து வைத்திருந்தது.

​​Fuerte Tiuna என்ற வெனிசுஏலாவின் பெரியதோர் இராணுவ முகாமில் தாக்குதல்கள் இடம்பெற்றதால் தீ பரவி உள்ளது.