வெனிசுஏலா சனாதிபதி மடுரோவையும் அவரின் மனைவியையும் கைப்பற்றி அமெரிக்காவுக்கு எடுத்து சென்ற அமெரிக்க சனாதிபதி ரம்ப் அமெரிக்கா வெனிசுஏலாவை ஆட்சி செய்யும் (“run the country”) என்றும், வெனிசுஏலாவின் பெரும் எண்ணெய் வளம் (“massive oil reserves”) அமெரிக்காவுக்கு உரியது என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்க எரிபொருள் நிறுவனங்கள் வெனிசுஏலா எண்ணெய் வளத்தை சந்தைப்படுத்தும் என்றும் அமெரிக்க இராணுவம் அதற்கு பாதுகாப்பு வழங்கும் என்றும் ரம்ப் கூறியுள்ளார்.
அதேவேளை நியூ யார்க் நீதிமன்றில் மடுரோ மீது போதை மற்றும் ஆயுத குற்றச்சாட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
வெனிசுஏலாவின் சில பகுதி வீதிகளில் Colectivos Chavistas என்ற மடுரோ ஆதரவு மக்கள் ஆயுத குழு ஆயுதங்களுடன் உலாவுவதாக படங்களுடன் செய்திகள் வருகின்றன. இவர்கள் அமெரிக்காவை எதிர்ப்பவர்கள்.
அமெரிக்காவின் Democratic கட்சி காங்கிரஸ் உறுப்பினர் Jack Auchincloss மடுரோ கைது “nothing to do with narco-trafficking” என்றும் “This is blood for oil” என்றும் கூறியுள்ளார்.
