வெனிசுஏலாவை தாக்கி அந்த நாட்டு சனாதிபதி மடுரோவை அமெரிக்காவுக்கு கடத்திய பின் அமெரிக்க சனாதிபதி ரம்ப் தற்போது கியூபாவை மிரட்ட ஆரம்பித்துள்ளார்.
கியூபா தன்னுடன் உடன்படிக்கை ஒன்றுக்கு வரவேண்டும் என்றும் தவறின் காலம் கடந்து விடும் (”make a deal, BEFORE IT IS TOO LATE”) என்று ரம்ப் நேற்று ஞாயிறு கூறியுள்ளார்.
மடுரோ கைப்பற்றலுக்கு முன் வெனிசுஏலா கியூபாவுக்கு நாளாந்தம் 35,000 பரல் மசகு எண்ணெய்யை வழங்கி வந்தது.
1959ம் ஆண்டு சோவியத் ஆதரவுடன் பிடல் காஸ்ரோ கியூபாவில் ஆட்சி அமைத்த பின் அமெரிக்காவுக்கும் கூபாவுக்கும் இடையில் முரண்பாடுகள் தொடர்கின்றன.
ரம்ப் தென் அமெரிக்க நாடான கொலம்பியாவையும் (Colombia) மிரட்டி வருகிறார்.
