கடந்த சனிக்கிழமை இலங்கையில் பார்வைக்கு வைக்கப்பட்ட 3,563 கரட் நீல கல்லின் (Purple Star Sapphire) பெறுமதி சுமார் $300 மில்லியன் முதல் $400 மில்லியன் வரை என்று கணிக்கப்படுகிறது.
இவ்வகை கற்களில் இந்த கல்லே உலகத்தில் மிக பெரியது. இந்த கல்லுக்கு “Star of Pure Land” என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த கல் Gemological Institute of America வின் சான்றிதழை பெற்றுள்ளது.
நீல கல் நவரத்தினங்களில் ஒன்று இரத்தினமாகும். மேற்படி கல் 2023ம் ஆண்டு இரத்தினபுரியில் கண்டெடுக்கப்பட்டு இருந்தது.
பாதுகாப்பு கருதி இதன் உரிமையாளர் விபரம் தற்போதும் அறிவிக்கப்படாது உள்ளது.
