பெரும் பனிப்புயல் (winter storm) ஒன்று வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் அமெரிக்காவின் 46 மாநிலங்களை தாக்கவுள்ளது. இந்த புயல் கனடாவின் Toronto, Ottawa, Montreal ஆகிய நகரங்களை உள்ளடக்கிய கிழக்கு பகுதிகளையும் கடுமையாக தாக்கும்.
சனிக்கிழமை Minnesota மாநிலத்து Minneapolis நகரில் வெப்பநிலை -23F (-30C) ஆக உணரப்படும். Illinois மாநிலத்து Chicago நகரில் வெப்பநிலை -19F (-28C) ஆக உணரப்படும். Ohio மாநிலத்து Cleveland நகரில் வெப்பநிலை -10F (-23C) ஆக உணரப்படும்.
பல இடங்களில் 6 அங்குலம் முதல் 12 அங்குலம் வரையான snow வீழ்ச்சி இடம்பெறும். சில இடங்களில் 3 தினங்களில் 36 அங்குலம் வரையான snow வீழ்ச்சி இடம்பெறும்.
பல இடங்களில் snow மட்டுமன்றி ஆபத்தான அளவில் ice படிவுகளை உருவாக்கும். இதனால் விமான மற்றும் வீதி பயணங்கள் தடைப்படும். மின்சார சேவையும் தடைப்படலாம்.
