ஆப்கான் யுத்த NATO மரணத்தை இழிவுபடுத்திய ரம்ப்

ஆப்கான் யுத்த NATO மரணத்தை இழிவுபடுத்திய ரம்ப்

நேற்று அமெரிக்க Fox செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய உரையில் அமெரிக்க சனாதிபதி ரம்ப் அமெரிக்கா யுத்தம் ஒன்றில் ஈடுபட்டால் நேட்டோ நாடுகள் அமெரிக்காவின் உதவிக்கு முன்வரா என்றும் நேட்டோ நாடுகளின் படையினர் ஆப்கானித்தானில் முன்னுக்கு நின்று போராடாமல் பின்னுக்கு நின்றதாகவும் அறிவற்ற முறையில் குற்றம் சாட்டியுள்ளார்.

 “They’ll say they sent some troops to Afghanistan,” என்றும், “and they did, they stayed a little back, a little off the front lines” என்றும் ரம்ப் கூறியுள்ளார்.  

ரம்பின் இந்த தவறான கூற்றால் நேட்டோ நாடுகள் படு விசனம் கொண்டுள்ளன.

நியூ யார்க் நகரில் இடம்பெற்ற 9/11 தாக்குதலின் பின் நேட்டோ நாடுகள் Article 5 சட்டத்தை நடைமுறை செய்து அமெரிக்காவின் உதவிக்கு வந்திருந்தன. ஆப்கானித்தானில் சுமார் 20 ஆண்டுகள் இடம்பெற்ற யுத்தத்திலும் நேட்டோ நாடுகள் பங்கெடுத்து இருந்தன.

ஆப்கானிஸ்தானில் மொத்தம் 3,621 நேட்டோ படையினர் பலியாகி இருந்தனர். அதில் 2,461 பேர் மட்டுமே அமெரிக்கர் (அமெரிக்க சனத்தொகை 309 மில்லியன்). மிகுதி 1,160 பேரும் ஏனைய நேட்டோ நாட்டவர்.

பிரித்தானியர் 457 பேரும் (சனத்தொகை 63 மில்லியன்), கனேடியர் 159 பேரும் (சனத்தொகை 34 மில்லியன்), பிரான்சின் 90 பேரும் (சனத்தொகை 63 மில்லியன்), ஜெர்மனியின் 62 பேரும் (சனத்தொகை 82 மில்லியன்) நேட்டோ சார்பில் மரணித்து இருந்தனர்.

தற்போது ரம்ப் ஆக்கிரமிக்க முனையும் கிரீன்லாந்து/டென்மார்க் படையினர் 43 பேரும் கூடவே ஆப்கானித்தானில் பலியாகி இருந்தனர்.