கனடிய பிரதமர் கார்னி அண்மையில் சீனா சென்று சீன சனாதிபதியுடன் செய்து கொண்ட வர்த்தக உடன்படிக்கையை நடைமுறை செய்தால் அமெரிக்கா வரும் அனைத்து பொருட்களுக்கும் 100% இறக்குமதி வரி நடைமுறை செய்யவுள்ளதாக அமெரிக்க சனாதிபதி சனி மிரட்டி உள்ளார்.
ரம்ப் இவ்வாறு பல வரி மிரட்டல்களை கனடா மீது வீசினாலும் அவை எல்லாம் நடைமுறை செய்யப்படவில்லை. அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே நடைமுறையில் உள்ள NAFTA வர்த்தக உடன்படிக்கை முதன்மை பெறுகிறது.
ஆனால் NAFTA (அல்லது CUSMA) இந்த ஆண்டு மீள்பார்வை செய்யப்படும். அதில் ரம்ப் தனது கடும் போக்கை திணிக்கலாம்.
