இன்று தங்கத்தின் விலை $5,000

இன்று தங்கத்தின் விலை $5,000

இன்று தங்கத்தின் விலை முதல் தடவையாக $5,000 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்க சனாதிபதி ரம்ப் செய்யும் பொருளாதார மற்றும் இராணுவ நகர்வுகள் காரணமாக செல்வந்தரும், செல்வந்த நாடுகளும் தமது சேமிப்புகளை தங்கத்தில் பதுக்க முனைவதாலேயே தங்கத்தின் விலை தொடர்ந்தும் அதிகரிக்கிறது.

தனது சேமிப்பை பாதுகாக்க சீனா கடந்த 14 மாதங்களாக தங்கத்தை பெருமளவில் கொள்வனவு செய்து வருகிறது.

2025ம் ஆண்டில் மட்டும் தங்கத்தின் பெறுமதி 64% வீதத்தால் அதிகரித்து உள்ளது. முன்னர் இவ்வகை அதிகரிப்புக்கு பல சந்ததிகள் தேவைப்படும்.

நம்பகத்தன்மையை இழக்கும் அமெரிக்க டாலரின் பெறுமதியும் குறைந்து வருவதாலும் செல்வந்தர் சேமிப்புகளை தங்கத்தில் பதுக்க முனைகின்றனர்.

தங்கம் மட்டுமன்றி வெள்ளியின் (silver) விலையும் வேகமாக அதிகரிக்கிறது. 2025ம் ஆண்டில் வெள்ளியின் விலை 150% ஆல் அதிகரித்து உள்ளது.