திங்கள் அமெரிக்க சனாதிபதி இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா நடைமுறை செய்துள்ள 50% இறக்குமதி வரியை 18% ஆக குறைப்பதாக இணைய செய்தி மூலம் குறிப்பிட்டார்.
தான் இந்திய பிரதமர் மோதியுடன் தொலைபேசி மூலம் உரையாடியதாகவும், அப்போது மோதி ரஷ்யாவில் இருந்தான எரிபொருள் கொள்வனவை நிறுத்த இணங்கியதாகவும் ரம்ப் கூறியிருந்தார் (“He agreed to stop buying Russian oil…”).
அத்துடன் தற்போது அமெரிக்காவிலிருந்து ஆண்டுக்கு $50 பில்லியன் பெறுமதியான கொள்வனவுகளை செய்யும் இந்தியா வருங்காலத்தில் அமெரிக்காவில் இருந்து $500 பில்லியன் பெறுமதியான கொள்வனவுகளை செய்ய இணங்கியதாகவும் ரம்ப் கூறியிருந்தார்.
அதற்கு மோதி அமெரிக்கா வரியை 18% ஆக குறைத்ததை மட்டும் பாராட்டி (“Big thanks to President Trump on behalf of the 1.4 billion people…”) மறுபுறம் ரம்ப் கூறிய ரஷ்ய எரிபொருள் கொள்வனவு நிறுத்தம், $500 பில்லியன் கொள்வனவு போன்ற விசயங்களை திட்டமிட்டு தவிர்த்து உள்ளார்.
இந்தியா தமது எரிபொருள் கொள்வனவை நிறுத்துவதாக கூறவில்லை என்று ரஷ்யா இன்று செவ்வாய் கூறியுள்ளது.
அண்மையில் இந்திய-பாகிஸ்தான் யுத்த நிறுத்தத்துக்கு தானே காரணம் என்று ரம்ப் கூற, இந்தியா அதை மறுத்து இருந்தது.
