15 மாதங்களாக சீனா தங்கத்தை கொள்வனவு செய்திருந்தது 

15 மாதங்களாக சீனா தங்கத்தை கொள்வனவு செய்திருந்தது 

சீன மத்திய வங்கியான People’s Bank of China (PBOC) கடந்த 15 மாதங்களாக தங்கத்தை கொள்வனவு செய்துள்ளது என்பது அதன் தங்க கையிருப்பு மூலம் அறியக்கூடியதாக உள்ளது.

2025ம் ஆண்டு PBOC 74.15 மில்லியன் troy அவுன்ஸ் தங்கத்தை சேமிப்பாக கையிருப்பில் கொண்டிருந்தது. அடுத்த மாதம், 2026ம் ஆண்டு ஜனவரியில் அத்தொகை 74.19 ஆக அதிகரித்து உள்ளது. இக்காலத்தில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை $5,500 ஐ தாண்டி இருந்தது.

அதாவது டிசம்பர் மாதத்தில் $319.45 பில்லியன் பெறுமதியான தங்கத்தை கொண்டிருந்த சீன மத்திய வங்கியிடம் ஜனவரி மாதம் $369.58 பில்லியன் பெறுமதியான தங்கம் இருந்துள்ளது. (சீன பொதுமக்களிடம் உள்ள தங்கம் இந்த தொகையில் உள்ளடங்கா)

இதற்கு முன், 2022ம் ஆண்டு டிசம்பர் முதல் 2024ம் ஆண்டு மே மாதம் வரையான 18 மாத காலத்திலும் சீனா தொடர்ச்சியாக தங்கத்தை கொள்வனவு செய்திருந்தது.