கனடா, அமெரிக்கா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ள 2026ம் ஆண்டுக்கான FIFA World Cup உதைபந்தாட்ட போட்டிகளை பார்வையிட செல்வோருக்கு விசேடமாக விசா இல்லை என்றும், வழமையான visitor விசாவே FIFA போட்டிகளை பார்வையிட வருவோருக்கு உரியது என்றும் கனடா கூறியுள்ளது.
திருட்டு நோக்கம் கொண்ட குடிவரவு முகவர்கள் பொய்யான FIFA விசா ஆசை காட்டி பணம் பறிக்க முயல்கின்றனர் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.
கனடா செல்வதற்கு விசா தேவையற்ற நாட்டவர் eTA என்ற electronic travel authorization என்ற பத்திரத்தை 7 கனடிய டாலர்களுக்கு இணையம் மூலம் பெற்று பயணம் செய்யலாம்.
மறுபுறம் அமெரிக்காவில் FIFA போட்டிகளை பார்வையிட செல்வோர் பலத்த கட்டுப்பாடுகளை சந்திப்பர். இவர்கள் குறைந்தது தமது 5 ஆண்டுகால social media பதிவுகளையும் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்.
