புதிய கனடா-அமெரிக்கா பாலத்தை தடுப்பேன் என்கிறார் ரம்ப் 

புதிய கனடா-அமெரிக்கா பாலத்தை தடுப்பேன் என்கிறார் ரம்ப் 

கனடாவின் Ontario மாநிலத்து Windsor நகரத்தையும் அமெரிக்காவின் Michigan மாநிலத்து Detroit நகரத்தையும் இணைக்க $4 பில்லியனுக்கும் மேலான செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட Gordie Howe International Bridge என்ற பால திறப்பு விழாவை தடுப்பேன் என்கிறார் அமெரிக்க சனாதிபதி ரம்ப்.

ரம்ப் தனது பதிவில் “I will not allow this bridge to open until the United States is fully compensated for everything we have given them, and also, importantly, Canada treats the United States with the Fairness and Respect that we deserve. We will start negotiations, IMMEDIATELY,” என்று கூறியுள்ளார்.

இந்த பாலத்துக்கு 2013ம் ஆண்டு ஒபாமா அரசு அனுமதி வழங்கி இருந்தது. அதற்கு ஏற்ப 2014ம் ஆண்டு United States Coast Guard அனுமதி பத்திரத்தை வழங்கியிருந்தது. அவ்வகை பாலத்தை எப்படி ரம்ப் தடுக்க முடியும்?

இந்த பாலத்துக்கான முழு செலவையும் கனடாவே செய்துள்ளது என்றாலும் கனடிய அரசும் Michigan மாநிலமும் பாலத்தில் சம உரிமையை கொண்டிருக்கும். கனடா பாலத்தை கடக்கும் பயணிகளிடம் கட்டணம் அறவிட்டு தனது முதலீட்டை மீள பெறும்.