ஜேர்மன் தலைவர் Merz புதன் சீனா பறக்கிறார் 

ஜேர்மன் தலைவர் Merz புதன் சீனா பறக்கிறார் 

அமெரிக்க சனாதிபதி ரம்பின் மிரட்டல்களுக்கு உள்ளான பிரித்தானிய, பிரெஞ்சு, கனடிய தலைவர்கள் சீனா பறந்ததுபோல் வரும் புதன்கிழமை மேர்ஸ் (Merz) என்ற ஜேர்மன் நாட்டின் தலைவரும் சீனா பறக்கிறார்.

இவரை சீன சனாதிபதி சீ, Premier Li Qiang ஆகியோர் வரவேற்பர். முதலில் சீன தலைநகர் பெய்ஜிங் செல்லும் Merz பின்னர் Hangzhou என்ற தென்கிழக்கு பகுதி நகருக்கும் செல்வார்.

2025ம் ஆண்டு ஜேர்மனிக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகத்தின் பெறுமதி $297 ஆக இருந்துள்ளது. 20025ம் ஆண்டில் சீனாவே ஜேர்மனியின் முதலாவது பெரிய வர்த்தக உறவு நாடு.

2016ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை சீனாவே ஜேர்மனியின் முதலாவது பெரிய வர்த்தக உறவு நாடாக இருந்தாலும் 2024ம் ஆண்டு முதலாம் இடத்தை அமெரிக்கா அடைய சீனா இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

அமெரிக்க சனாதிபதி ரம்ப் ஏப்ரல் மாதம் சீனா செல்லக்கூடும்.