ஈரானின் இஸ்லாமிய தலைவர் Ayatollah Ali Khamenei சனிக்கிழமை தாம் செய்த தாக்குதல்களுக்கு பலியாகி உள்ளதாக அமெரிக்க சனாதிபதி ரம்ப் கூறியுள்ளார். இஸ்ரேலும் அவ்வாறே கூறியுள்ளது.
Khamenei 1939ம் ஆண்டு பிறந்தவர். 1989ம் ஆண்டு முதல் இவரே ஈரானின் அதிகூடிய அதிகாரம் கொண்ட மத தலைவராக இருந்தவர்.
ஆனால் ஈரான் இதுவரை Khamenei இறந்தார் என்று அறிவிக்கவில்லை. Khamenei யின் குடியிருப்பு பகுதி குண்டு தாக்குதல்களால் முற்றாக அழிக்கப்பட்டு உள்ளமை செய்மதி படங்கள் மூலம் அறியப்படுகிறது.
அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களுக்கு இதுவரை சுமார் 200 பேர் ஈரானில் பலியாகி உள்ளதாகவும், ஒரு பெண்கள் பாடசாலை மீதான தாக்குதலுக்கு மட்டும் 115 மாணவிகள் பலியாகி உள்ளதாகவும் ஈரான் கூறியுள்ளது.
