சில அமெரிக்க விமானங்கள் குவைத்தில் விழுந்தன 

சில அமெரிக்க விமானங்கள் குவைத்தில் விழுந்தன 

ஈரான் மீதான தாக்குதல்களை செய்யும் சில அமெரிக்க யுத்த விமானங்கள் குவைத்தில் விழுந்துள்ளன என்று குவைத்தின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேணல் Said Al-Atwan கூறியுள்ளார்.

இன்று திங்கள் விழுந்த இந்த யுத்த விமானங்களின் விமானிகள் முறைப்படி பாராசூட் மூலம் தரை இறங்கி உள்ளனர். இவர்கள் உடனே வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டனர்.

அதேவேளை ஈரானில் மரணித்தோர் தொகை 555 ஆக அதிகரித்து உள்ளது.

இதுவரை மத்திய கிழக்கில் மட்டும் 3,400 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டு உள்ளன. அதனால் சுமார் 300,000 விமான பயணிகள் இப்பகுதில் முடங்கி உள்ளனர்.

இஸ்ரேலின்  தாக்குதல்களுக்கு லெபனானில் 31 பேர் பலியாகி உள்ளனர். பதிலுக்கு ஹெஸ்புல்லா தனது எறிகணைகளை வடக்கு இஸ்ரேல் நோக்கி ஏவுகிறது.

சவுதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதும் ஈரான் தாக்குதல் செய்துள்ளது.