ஈரான் மீதான யுத்தத்துக்கு அமெரிக்கா மட்டும் தற்போது தினமும் சுமார் $890 மில்லியன் செலவிடுவதாக அமெரிக்காவின் Center for Strategic and International Studies என்ற ஆய்வு அமைப்பு கணித்துள்ளது.
இந்த யுத்தத்தின் முதல் 100 மணித்தியாலங்களில், சுமார் 4 தினங்களில் மட்டும், அமெரிக்கா $3.7 பில்லியன் செலவு செய்துள்ளது.
வழமைபோல் அமெரிக்கா இந்த யுத்த செலவுகளையும் பகிரங்கம் செய்யாது ஒளித்து வைப்பதால் ஆய்வு நிறுவனங்கள் தரவுகளை வேறு வழிகளில் தேடி எடுத்தே தமது கணிப்பை செய்கின்றன.
இந்த செலவுகள் யுத்தத்துக்கான நேரடி செலவுகள் மட்டுமே. எரிபொருள் விலை அதிகரிப்பால் ஏற்படும் இழப்புகள், விமான சேவைகள் மற்றும் கப்பல் போக்குவரத்து முடக்கத்தால் ஏற்படும் இழப்புகள் போன்ற பக்க விளைவுகள் மேற்படி கணிப்பில் அடங்கா.
சதாமிடம் அணு குண்டுகள் உள்ளன என்ற முழு பொய்யுடன் ஈராக்குடன் அமெரிக்கா செய்த யுத்தத்துக்கு $3 டிரில்லியன் ($3,000 பில்லியன்) செலவாகி இருந்தது.
