ஈரான் யுத்தம் காரணமாக தற்போது ஒரு பரல் West Texas Intermediate (WTI) மசகு எண்ணெய் $108.66 ஆகவும், ஒரு பரல் Brent மசகு எண்ணெய் $108.69 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானை தாக்க முன், சுமார் ஒரு கிழமைக்கு முன், ஒரு பரல் எண்ணெய் விலை $60 ஆக இருந்தது. ஈரான் யுத்தத்தால் எண்ணெய் விலை சுமார் 80% ஆல் அதிகரித்து உள்ளது.
யுத்தம் தற்போதைக்கு நிறுத்தப்படாது. அதனால் எண்ணெய், எரிவாயு தட்டுப்பாடு தோன்ற, விலைகள் தொடர்ந்தும் அதிகரிக்கும்.
அதேவேளை படுகொலை செய்யப்பட்ட அயதொல்லா அலி கொமேனியின் மகன் Mojtaba Ali Khamenei ஈரானின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
