அமெரிக்க சனாதிபதி ரம்ப் திங்கள் பல உரைகளில் ஈரானுடனான யுத்தம் விரைவில் (pretty quickly) முடியும் என்று கூறியுள்ளார்.
ரம்பின் இந்த அறிவிப்புக்கு அமெரிக்காவினதும், இஸ்ரேலினதும் கையிருப்பில் உள்ள தடுப்பு ஏவுகணைகளின் அளவு குறைந்தமை காரணமாகலாம் என்று கருதப்படுகிறது. அத்துடன் அமெரிக்காவில் எரிபொருள் விலை வேகமாக அதிகரிப்பதால் வரவுள்ள mid-term தேர்தலில் ரம்பின் Republican கட்சி தோல்விகளை சந்திக்கலாம் என்ற பயமும் ரம்புக்கு தோன்றி இருக்கலாம்.
Anthony Blinken என்ற முன்னாள் அமெரிக்க Secretary of State தனது கூற்றிலும் “பங்கு சந்தையும், கையிருப்பில் உள்ள ஆயுதங்களும்” (markets, munitions) யுத்த தொடர்ச்சியை தீர்மானிக்கும் என்று கூறியுள்ளார்.
ரம்பின் மேற்படி கூற்றுகளுக்கு பின் பரல் எண்ணெய் ஒன்றின் விலை விலை $90 ஆக குறைந்துள்ளது. பங்கு சந்தைகளும் சிறிதளவு உயர்ச்சி அடைந்துள்ளன.
ரம்ப் ரஷ்ய சனாதிபதி பூட்டினுடனும் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
ஆனால் தற்போதும் யுத்தம் தொடர்கிறது. ஈரான் தாக்குதல்களை தொடர்கிறது.
