ஐயா ஆசி கந்தராஜா அவர்களே,
உங்கள் தரமான புனை கதைகளுக்கும், விளக்கமான விவசாய அறிவுகளுக்கும் முதல் நன்றிகள். இப்போது நாம் முட்டையில் சிகை பிடுங்கும் விசயத்துக்கு வருவோம்.
கருக்கட்டாத “முட்டைகள் அனைத்தும் சைவ முட்டைகளே” என்று நீங்கள் விஞ்ஞான வாடை கொண்ட வாதத்தை முன்வைத்து இருக்கிறீர்கள்.
கேள்வி 1: கோழி உட்பட ஒரு உயிரின் அளவு 100% என்றால், ஏன் கருக்கட்டாத முட்டையின் உயிர் பங்களிப்பு 50% ஆகவும், முளையத்தின் உயிர் பங்களிப்பு 50% ஆகவும் இருக்க முடியாது? அதுவே 50%+50%=100% ஆகும். கோழி குஞ்சின் அரைப்பங்கு DNA முட்டையில் இருந்துதானே கிடைக்கிறது. உங்கள் வாதத்தில் germinal disc கின் பங்களிப்பு தெளிவாக கூறப்படவில்லையே.
உங்களின் வாதப்படி கருகட்டாத முட்டை 0% உயிரையும், முளையம் 0% உயிரையும் வழங்க கருக்கட்டல் 100% உயிரை உருவாக்குகிறதா? அது 0%+0%=100% என்றல்லவா ஆகும். கேள்வி 2: அல்லது முட்டை 0% உயிரையும், முளையம் 100% உயிரையும் வழங்குகிறது என்று விஞ்ஞான முறைப்படி நிரூபிக்க முடியுமா?
உயிரை quantitatively அளவிட தேவையான அலகை (unit) கொண்டிராத விஞ்ஞானம் உயிரை அளவிட முனையலாமா? விஞ்ஞானத்திடம் உள்ள meter, kg, liter, Celsius… போன்ற அலகுகள் எவ்வகையில் உயிரை quantitatively, qualitatively அளக்க பயன்படும்?
மேற்கு நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில், pro-life கூட்டமும், pro-choice கூட்டமும் மனித உயிருக்கு வழங்கும் வரைவிலக்கணம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். கருக்கட்டல் நிகழந்த உடனேயே உயிர் தோன்றிவிட்டது என்று pro-life கூட்டம் வாதாட (பொதுவாக Republican), குழந்தை பிறந்த பின்னரே உயிர் தோன்றியது என்றும், அதனால் கருத்தடை ஒரு கொலை அல்ல என்றும் pro-choice கூட்டம் வாதிடுகிறது (பொதுவாக Democrats).
Pro-choice வாதப்படி கருக்கட்டிய முட்டையும் சைவமே. குஞ்சு முட்டையை உடைத்து வெளியே வந்த பின்னரே அசைவம் ஆகிறது. நீங்கள் pro-choice கூட்டமா அல்லது pro-life கூட்டமா?
இப்போது நீங்கள் உயிரின் legal வரைவிலக்கணம் வேறு, medical வரைவிலக்கணம் வேறு என்று கூறுகிறீர்களா? கேள்வி 3: அப்படியானால் உங்கள் farm முட்டைகள் அனைத்தும் சைவ முட்டைகள் என்ற கூற்று ஒரு legal கூற்றா அல்லது ஒரு medical கூற்றா?
சைவ உணவுகளை மரக்கறி உணவுகள் (vegetarian) என்றும் அழைப்பர். தாவரங்களுக்கும் (vegetation) உயிர் உண்டு. கேள்வி 4: அதனால் சைவம், அசைவம் என்ற பாகுபாடு உயிரை அடிப்படையாக கொண்டு பகுக்கப்படுவது சரியா அல்லது தாவரம், மாமிசம்/மிருகம் என்ற வகையில் பகுக்கப்படுவது சரியா? கருக்கட்ட முன்னான முட்டையும் ஒரு மாமிசம்/மிருக பாகம் தானே. உயிர் உள்ள தாவரத்தை உண்பது அசைவம் ஆகுமோ?
ஒரு கோழியை கொலை செய்யாது, அதன் கால் ஒன்றை மட்டும் amputate செய்து குழம்பு வைத்தால் அது ஒரு சைவ குழம்பு ஆகிவிடுமா? கோழி சாகவில்லை தானே.
எல்லாவற்றுக்கும் மேலாக சைவம் ஒரு மத அறிவா அல்லது சைவ மக்களின் விஞ்ஞான அறிவின் பிரதிபலிப்பா? சைவத்தை/மதத்தை உயர்த்தி பிடிக்காத வள்ளுவர் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன் எழுதிய தனது திருக்குறளில் ஊன் உண்ணாமையை வலியுறுத்தி உள்ளமை, சைவ உணவு முறை, ஆதி தமிழர் கொண்டிருந்த சொந்த விஞ்ஞான அறிவுக்கு சான்று ஆகிறது.
தாவரத்துடன் ஒப்பிடுகையில் மிருகங்கள் நோய்களை அதிக அளவில் ஒரு உயிரின கூட்டத்தில் இருந்து இன்னோர் கூட்டத்துக்கு காவுகிறது. அண்மையில் உலகை உலுக்கிய COVID நோய் பரம்பலுக்கும் இதுவே காரணம். மாமிச உண்ணிகளான பலரும் மாடு, ஆடு போன்ற தாவர உண்ணிகளையே உண்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே பாம்பு போன்ற மாமிச உண்ணிகளை உண்பர். கனடாவில் இலாப நோக்கத்தில் அரைத்த மீன்களை மாடுகளுக்கு ஊட்டி அந்த மாடுகளுக்கு mad cow நோய் தொற்ற காரணமாகினர். தற்போது அம்முறை அங்கு தடை செய்யப்பட்டுள்ளது.
ஒரு kg மாட்டு இறைச்சியை உற்பத்தி செய்ய சுமார் 1,000 kg புல், 15,000 லீட்டர் நீர் தேவைப்படுமாம். இந்த அளவுகள் மிக திருத்தமானவை அல்ல என்றாலும், இவற்றில் ஓரளவு உண்மை உண்டு. மாமிச உணவு உற்பத்தி முறை sustainable உணவு உற்பத்தி முறையா? கேள்வி 5: சைவ உணவு முறைமைக்கு மேலான sustainable உணவு உற்பத்தி முறைமை வேறு உண்டா?
இன்றைய தமிழர் ஒரு முட்டாள் கூட்டம். அதனால் தான் இந்தியா உரு ஏற்றிவிட இவர்கள் ஆரம்பித்த போராட்டம் உடுத்து இருந்ததும் பறிக்கப்பட முள்ளிவாய்க்காலில் கோவணத்துடன் முடிந்தது. இன்றைய தமிழனின் அறிவு ஒரு second hand smoking போன்றது; வெள்ளையன் தானாக அறிந்த அறிவை பின்னர் புத்தகத்தில் படித்து அறிவது. ஆனால் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழன் தானாக அறிந்த அறிவுகள் உன்னதம்.
மரணித்த மனிதரை புதைக்காமல் தகனம் செய்வது இன்னோர் சிறந்த உதாரணம். இதுவும் ஒரு இனத்தின் அல்லது இன கூட்டத்தின் sustainable தீர்வே. மாமிச உணவை தவிர்ப்பதுவும், தமது உடலை தகனம் செய்ய கேட்பதுவும் தற்போது மேற்கு நாடுகளில் அதிகரித்து வருகிறது. இவர்கள் மாமிசத்தை கைவிட மதம் ஒரு காரணம் அல்ல. பதிலாக sustainability யே பிரதான காரணமாகிறது.
உங்கள் படத்தில் காட்டப்பட்டது ஒரு கருக்கட்டாத அவித்த முட்டை போல் உள்ளது. முட்டையை அவிக்க முன், இயற்கையில் கூழ்/திரவ நிலையில் உள்ள மஞ்சள் கருவின் மத்தியில் எவ்வாறு ஒரு வெற்றிடம் நிலைகொள்ளும்? நீரில் நீர்க்குமிழி இருக்க முடிவது அங்கே pressurized வளி இருப்பதால் தானே. கேள்வி 5: வளி புக முடியாத மஞ்சள் கருவின் மத்தியில் இருந்த pressurized வாயு என்ன?
பிசைக்கார படித்தவர்கள் பணக்கார நிறுவனங்களிடம் பணம் பெற்று பொய் ஆய்வுகள் செய்வது, ஆய்வுகளை திரித்து கூறுவது சாதாரணம். 1967ம் ஆண்டு New England Journal of Medicine என்ற ஆய்வு வெளியீட்டில் Sugar Research Foundation ஆய்வு ஒன்றை திரித்து, சீனியின் ஆபத்தை மறைத்து கதை விட்டு பின் அகப்பட்டு கொண்டது. ஆனால் நீங்கள் நல்லவர், முட்டை industry யிடம் பணம் பெற்று பரப்புரை செய்யும் நோக்கம் உங்களுக்கு இருக்காது.
நன்றி,
இளவழகன்
