ஈரானுடனான யுத்தம் காரணமாக அமெரிக்க சனாதிபதி ரம்பின் சீனாவுக்கான பயணம் பிற்போடப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பை ரம்ப் திங்கள் கூறியுள்ளார்.
பிற்போடலுக்கான வேண்டுகோளை தாமே சீனாவிடம் கேட்டதாகவும் ரம்ப் கூறியுள்ளார்.
தற்போது பயணம் ஒரு மாத காலத்தால் பிற்போடப்பட்டு இருந்தாலும் யுத்தம் தொடர்ந்தால் ரம்பின் பயணம் மேலும் நீண்ட காலத்துக்கு பிற்போடப்படலாம்.
தடைப்பட்டு உள்ள ஹோர்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவர சீனாவின் உதவியை ரம்ப் நாடியுள்ளார். ஆனால் சீனா தனது பங்களிப்பை இதுவரை அறிவிக்கவில்லை.
ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ அணிகளும் தற்போதைக்கு தாம் ஹோர்முஸ் பாதையை பாதுகாக்கும் பணியில் பங்கெடுக்கப்போவது இல்லை என்று கூறியுள்ளன.
தான் ஈரானை தாக்க திட்டமிடும்போது ஈரான் பதிலுக்கு UAE, கட்டார், பஹ்ரைன், சவுதி, குவைத் ஆகிய அண்டை நாடுகளை தாக்கும் என்று எதிர்பார்த்து இருக்கவில்லை என்றும் ரம்ப் கூறியுள்ளார்.
