மேற்கு நாடுகளில் மீண்டும் பேசப்படும் அனுரவின் ஆளுமை

மேற்கு நாடுகளில் மீண்டும் பேசப்படும் அனுரவின் ஆளுமை

அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்த பின் இரண்டாம் தடவையாக அனுரவின் துணிவான ஆளுமை மேற்கு நாடுகளில் பலமாக பேசப்படுகிறது. அமெரிக்காவின் The New York Times பத்திரிகையும் இதை செய்தியாக பதிந்துள்ளது.

பெப்ரவரி மாதம் 26ம் திகதி அளவில், ஈரானை தாக்க 2 தினங்கள் முன்னாக, அமெரிக்கா ஆயுதங்கள் கொண்ட தனது 2 யுத்த விமானங்களை இலங்கை மத்தள விமான நிலையத்தில் தரிக்க அனுமதி கேட்டிருந்தது. ஆனால் நடுநிலை கொள்கையுடன் உள்ள இலங்கை அனுமதி வழங்கவில்லை.

யுத்தத்துக்கு முன் ஈரானும் சில யுத்த கப்பல்களை இலங்கையில் தரிக்க அனுமதி கேட்டிருந்தது. அந்த அனுமதியும் இலங்கையால் வழங்கப்படவில்லை.

ஆனால் ஆயுதங்களை கொண்டிராத Dena என்ற ஈரானின் யுத்த கப்பல் அமெரிக்காவால் தாக்கப்பட்ட பின் சர்வதேச விதிகளுக்கு அமைய இலங்கை விரைந்து சென்று காப்பாற்றியது.

மறுபுறம் கடந்த அக்டோபர் மாதம் “The Indian Navy is the guardian of the Indian Ocean” என்று இந்திய கடற்படை முன் வீராப்பு பேசிய இந்திய பிரதமர் மோதி இந்தியாவுக்கு விருந்தாளியாக வந்திருந்த Dena இந்து சமுத்திரத்து இந்திய கடல் எல்லையில் தாக்கப்பட்ட விசயத்தில் இன்றும் ஆளுமை இன்றி அமைதியாக உள்ளார்.