அமெரிக்க சனாதிபதி ரம்பின் ஆட்சிக்கான ஆதரவு 36% ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதுவே ரம்ப் இதுவரை பெற்றுள்ள அதி குறைந்த ஆதரவு.
ரம்புக்கான Approval வீதம் 36% ஆக குறைய, அவருக்கான Disapproval வீதம் 62% ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாகா ஈரான் மீதான ரம்பின் யுத்தம் அவருக்கான ஆதரவு மேலும் சரியா காரணம் ஆகியது.
Reuters செய்தி நிறுவனமும், Ipsos ஆய்வு நிறுவனமும் இணைந்து செய்த கணிப்பே இந்த தரவை வெளியிட்டு உள்ளது.
இதனால் வரும் அமெரிக்க mid-term தேர்தலில் ரம்பின் Republican கட்சி காங்கிரசில் கொண்டுள்ள பெரும்பான்மையை இழக்கலாம். அதனால் ரம்பின் கடைசி 2 ஆண்டுகாலமும் முடங்கிப்போன ஆட்சியாக அமையலாம்.

