அமெரிக்கா யுத்த இழப்புகளை இருட்டடிப்பு செய்கிறது

அமெரிக்கா யுத்த இழப்புகளை இருட்டடிப்பு செய்கிறது

அமெரிக்க சனாதிபதி ரம்பின் அரசு ஈரானுக்கு எதிரான யுத்தத்தில் தமக்கு ஏற்படும் இழப்புகளை பகிரங்கம் செய்யாது இருட்டடிப்பு செய்வது அங்கிருந்து கசியும் ஆதாரங்கள் மூலம் அறியப்படுகிறது.

உதாரணமாக யுத்தம் ஆரம்பமாகி 27 தினங்களின் பின்னான வெள்ளிக்கிழமை ஈரான் சவுதி அரேபியாவின் Prince Sultan Air Base தளம் மீது செய்த ஏவுகணை தாக்குதலுக்கு 12 அமெரிக்க படையினர் காயமடைந்தனர் என்று மட்டுமே அமெரிக்கா அறிவித்து இருந்தது.

ஆனால் அந்த தாக்குதலுக்கு அமெரிக்கா E-3 அல்லது AWACS (Airborne Warning And Control System) என்ற மிக பிரதானமான வேவு பார்க்கும் விமானம் ஒன்றையும் இழந்தமை அங்கிருந்து கசிந்த படம் ஒன்று மூலம் தற்போது அறியப்படுகிறது.

வேறு செய்திகள் ஒன்றல்ல, இரண்டு E-3 விமானங்கள் அழிக்கப்பட்டதாக கூறுகின்றன.

இந்த விமானம் சுமார் 1/2 பில்லியன் டாலர் ($540 மில்லியன்) பெறுமதியானது. அமெரிக்காவிடம் இவ்வகை விமானங்கள் 17 மட்டுமே உள்ளன. அதில் ஒன்றே முற்றாக அழிக்கப்படுள்ளது.

இந்த விமானம் 120,000 சதுர மைல் பரப்பில், நிலத்தில் இருந்து அண்டம் வரை 600 குறிகளை கண்காணிக்க வல்லது.