வெள்ளிக்கிழமை ஏப்ரல் 3ம் திகதி ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் F-15 யுத்த விமான விமானிகளில் ஒருவர் உடனடியாக மீட்கப்பட்டு இருந்தார். ஆனால் இரண்டாவது விமானியை மீட்க அமெரிக்கா சுமார் $500 மில்லியன் பெறுமதியான இழப்புகளை அடைந்துள்ளது.
இரண்டாம் விமானி ஈரானின் Zagros மலை பகுதில் ஒளிந்து இருப்பதை அறிந்த அமெரிக்கா அவரை மீட்க திட்டமிட்டது. அப்பகுதியில் இருந்த கைவிடப்பட்ட விமான நிலையம் ஒன்றில் தரை இறங்கி விமானியை மீட்க திட்டம் தீட்டப்பட்டது.
திட்டப்படி ஞாயிறு அமெரிக்காவின் இரண்டு Hercules வகை MC-130 விமானங்களும், 4 ஹெலிகளும் மேற்படி கைவிடப்பட்ட விமான ஓடு பாதையில் இறங்கின. பழுதான ஓடு பாதை காரணமாக பெரிய MC-130 விமானங்கள் தரை இறங்கும்போது பாதிப்புக்கு உள்ளான. அவற்றால் மீண்டும் ஓடி மேலேற முடியாத நிலை தோன்றியது.
வேறு வழியின்றி மேலதிக விமானங்கள் வரவழைக்கப்பட்டு அமெரிக்கர் தப்பினர்.
பழுதடைந்த MC-130 விமானங்கள் ஈரானின் கைகளில் அகப்படக்கூடாது என்ற நோக்கில் அமெரிக்கர் இரண்டு விமானங்களையும் தாமே தாக்கி அழித்ததாக கூறினார்.
கூடவே 4 ஹெலிகளும் தாக்கி அழிக்கப்பட்டன. பறக்கும் நிலையில் இருந்த ஹெலிகளை ஏன் அமெரிக்கர் அழித்தார்கள் என்று கூறவில்லை. சிலவேளை இவை அங்கு விரைந்த ஈரான் படைகளால் அழிக்கப்பட்டிருக்கலாம்.
வரலாற்றில் ஒரு விமானியை மீட்க செலவான அதிக தொகை இதாகவே இருக்கும்.
