பாகிஸ்தானின் முயற்சியில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் அறிவித்திருந்த யுத்த நிறுத்தம் தற்போதும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை. இஸ்ரேல் லெபனான் மீது தொடரும் தாக்குதலே இதற்கு காரணம்.
மேற்படி யுத்த நிறுத்தம் லெபனான் மீதான தாக்குதல்களையும் இடைநிறுத்தும் என்று பாகிஸ்தான் கூறியிருந்தது. ஆனால் இஸ்ரேல் யுத்த நிறுத்தம் ஆரம்பித்த சிறிது நேரத்தில், புதன்கிழமை, 10 நிமிட இடைவெளியில் 100 க்கும் அதிகமான தாக்குதல்களை லெபனானில் செய்துள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு குறைந்தது 182 பலியாகியும், 900 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர்.
பிரான்சு பிரதமர் மக்கிறானும் லெபனான் மீதான தாக்குதலை கண்டித்து உள்ளார்.
ஹோர்முஸ் ஊடான கப்பல் போக்குவரத்து தற்போதும் பெருமளவில் தடைப்பட்டு உள்ளது.
