அமெரிக்க-ஈரான் பேச்சு தீர்வு இன்றி முடிந்தது

அமெரிக்க-ஈரான் பேச்சு தீர்வு இன்றி முடிந்தது

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் பாகிஸ்தானில் சனி, ஞாயிறு இடம்பெற்ற யுத்த நிறுத்த பேச்சு இணக்கம் எதுவுமின்றி முடிந்துள்ளது. அதனால் ஹோர்முஸ் கடல் வழி தொடர்ந்தும் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது.

பேச்சில் நேரடியாக பங்கெடுக்க பாகிஸ்தான் வந்திருந்த அமெரிக்க உதவி சனாதிபதி JD வன்ஸ் தீர்வு இன்றி மீண்டும் அமெரிக்கா திரும்புகிறார்.

அத்துடன் தற்போது இன்னொரு பேச்சுக்கு திட்டம் எதுவும் இல்லை என்று இரு தரப்பும் கூறியுள்ளன.

அமெரிக்காவின் அடுத்த நகர்வு ரம்பின் கைகளில் உள்ளது.

அதேவேளை சீனா ஈரானுக்கு மேலதிக ஏவுகணைகளை வழங்க முன்வந்துள்ளது என்று அமெரிக்க உளவுகள் அறிந்துள்ளன. சீனாவின் இந்த நகர்வை ரம்ப் எதிர்த்து கருத்து தெரிவித்துள்ளார்.