ஏற்கனவே ஈரான் மூடிய ஹோர்முஸ் ஊடான கப்பல் போக்குவரத்தை தானும் மூடுவதாக அமெரிக்க சனாதிபதி ரம்ப் அறிவித்துள்ளார். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பாகிஸ்தான் பேச்சுக்களில் தீர்வு ஏற்படாததாலேயே ரம்ப் தானும் ஹோர்முசை மூடுகிறார்.
எப்போதும் முன் பின் சிந்துக்காது மிரட்டும் ரம்ப் இம்முறையும் ஹோர்முஸ் பாதையில் செல்லும் “any and all” கப்பல்களும் தடுக்கப்படும் என்று முதலில் கூறினார்.
அவரின் முதல் அறிவிப்பு சவுதி, UAE, கட்டார், பஹ்ரைன், குவைத் ஆகிய அமெரிக்க ஆதரவு நாடுகளுக்கு செல்லும் கப்பல்களையும் தடுக்கும் என்பதால் பின்னர் அவரின் மிரட்டல் அமெரிக்க தடை ஈரான் தொடர்பு கப்பல்களுக்கு மட்டுமே என்று மாற்றப்பட்டது.
இந்த தடை நியூ யார்க் நேரப்படி திங்கள் காலை 10:00 மணிக்கு ஆரம்பமாகும் என்று கூறப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைகள் முறிந்தாலும் இருதரப்பும் இதுவரை யுத்த நிறுத்தத்தை முறிக்கவில்லை.
