2026ம் ஆண்டுக்கான FIFA World Cup விளையாட்டு போட்டிகள் ஜூன் மாதம் 11ம் திகதி முதல் 19ம் திகதி வரை அமெரிக்கா, கனடா, மெக்ஸிக்கோ ஆகிய 3 நாடுகளில் உள்ள பல நகரங்களில் இடம்பெறவுள்ளன.
அமெரிக்க நியூ யார்க் நகரில் FIFA போட்டிகள் நகரில் இருந்து 14 km தொலைவில் உள்ள Metlife Stadium என்ற மைதானத்தில் இடம்பெறவுள்ளன.
இந்த 14 km தூரத்தில் உள்ள மைதானத்திற்கு சென்றுவர அரச ரயில் போக்குவரத்து இருவழி பயண கட்டணமாக $150 அறவிடவுள்ளது. இலங்கை நாணயப்படி இத்தொகை சுமார் Rs. 47,400. வழமையாக இந்த தூரத்துக்கான கட்டணம் $12.90 மட்டுமே.
Boston நகரில் சுமார் 48 km தூரத்தில் உள்ள Gillette Stadium என்ற மைதான FIFA போட்டிகளுக்கு சென்று வர பஸ் கட்டணம் $95 ஆக இருக்கும்.
ஆனால் Los Angeles நகரில் இருவழி FIFA பயண கட்டணம் $3.50 ஆக மட்டுமே இருக்கும். Atlanta நகரில் இருவழி FIFA கட்டணம் $5.00 ஆகவும், Houston, Philadelphia ஆகிய நகரங்களில் இருவழி கட்டணம் $2.50 ஆகவும் இருக்கும்.
