தெற்கு லெபனானை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல் படைகள் அங்கு சிலுவையில் அறையப்பட்டிருந்த ஜேசு சிலை ஒன்றையும் உடைத்துள்ளன. இந்த படம் ஏப்ரல் மாதம் 19ம் திகதி இணையத்தில் பதியப்பட்டுள்ளது.
இந்த சிலை கிறிஸ்தவர்களை பெரும்பான்மையாக கொண்ட Debl என்ற தெற்கு லெபனான் நகரில் இருந்தது.
இந்த படம் ஒரு உண்மையான படம் என்பதை ஏற்றுக்கொண்ட இஸ்ரேல் தாம் இதை விசாரணை செய்வதாக கூறியுள்ளது.
இஸ்ரேல் படைகள் West Bank, காசா, லெபனான் ஆகிய இடங்களில் இஸ்லாமிய பள்ளிகளை மட்டுமன்றி கிறிஸ்தவ ஆலயங்களையும், சின்னங்களையும் அழித்து வருகின்றன.
2024ம் ஆண்டு ஜனவரி முதல் 2025ம் ஆண்டு செப்டெம்பர் வரையான காலத்தில் 201 கிறிஸ்தவ நிலையங்கள் அல்லது கிறிஸ்தவர்கள் இஸ்ரேல் படைகளால் அல்லது கடும்போக்கு யூதர்களால் தாக்கப்பட்டு உள்ளன என்று Religious Freedom Data Center கூறியுள்ளது.
