இணக்கமின்றி ஹோர்முஸ் உள் நுழைய ரம்ப் முயற்சி, ஈரான் தடுப்பு

இணக்கமின்றி ஹோர்முஸ் உள் நுழைய ரம்ப் முயற்சி, ஈரான் தடுப்பு

தானும், இஸ்ரேலும் விரும்பும் தீர்வுக்கு ஈரான் இணைக்காத நிலையில் அமெரிக்க சனாதிபதி ரம்ப் “அகப்பட்ட கப்பல்களை விடுவிக்கிறேன்” என்று சாட்டு கூறி ஹோர்முஸ் உள் நுழைய முற்பட்டாலும், அச்செயல் யுத்த நிறுத்த இணக்கத்துக்கு முரண் என்று கூறி தாக்க தயாராகிறது ஈரான்.

ஈரான் கப்பல்கள் மீது தொடர்ந்தும் தனது தடையை நடைமுறை செய்து கொண்டே அமெரிக்கா ஏனைய கப்பல்களை விடுவிக்க முனைகிறதாம்.

இந்த பணிக்கு ஏவுகணைகள், 100 க்கும் மேற்பட்ட யுத்த விமானங்களையும், 15,000 படையினரையும் பயன்படுத்த உள்ளதாக அமெரிக்க இராணுவ அதிகாரிகள் கூறி இருந்தனர்.

ஹோர்முஸ் உள் நுழைய முயன்ற அமெரிக்க யுத்த கப்பல் ஒன்று மீது தாம் இரண்டு ஏவுகணைகளை ஏவியதாக ஈரான் கூறியுள்ளது. அமெரிக்கா அதை மறுத்து உள்ளது.

அதேவேளை ADNOC என்ற எண்ணெய் கப்பலை ஈரான் தாக்கியதாக UAE கூறியுள்ளது.