Ursa Major என்ற ரஷ்ய கப்பல் டிசம்பர் மாதம் 23ம் திகதி ஸ்பெயின் நாட்டில் இருந்து சுமார் 100 km தொலைவில், 2,500 மீட்டர் ஆழத்தில் கடலில் மூழ்கி உள்ளது. இந்த கப்பலில் இரண்டு சிறிய அணு உலைகள் இருந்ததாக கூறப்படுகிறது.
அணுவில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களை இயக்க பயன்படும் இந்த இரண்டு அணு உலைகளும் வட கொரியாவுக்கு சென்றவையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த கப்பலின் உள்ளே ஏற்பட்ட விபரம் அறியப்படாத வெடிப்பே கப்பல் மூழ்க காரணம் என்றும் கூறப்படுகிறது. காவி செல்லப்பட்ட உலைகளில் அணு எரிபொருள் இருந்ததா என்று அறியப்படவில்லை.
யூக்கிறேன் யுத்தத்தில் 10,000 க்கும் மேற்பட்ட வட கொரிய படையினர் ரஷ்யா சார்பில் சண்டையிட்டு, அதில் பல்லாயிரம் பேர் பலியாகியும் இருந்தனர். வட கொரியாவின் இந்த பங்களிப்புக்கு பதிலாகவே ரஷ்யா மேற்படி இரண்டு அணு உலைகளை அனுப்ப முயன்று இருக்கலாம்.
இந்த விபத்தின் பின் ரஷ்ய வேவு கப்பல்கள் 4 தடவைகள் இந்த இடத்துக்கு பயணித்து உள்ளன. அதில் Yantar என்ற ரஷ்ய கப்பல் 5 தினங்களாக இந்த இடத்தில் தரித்து நின்றுள்ளது.
ரஷ்யாவின் Ivan Gren, Aleksandr Otrakovsky ஆகிய இராணுவ கப்பல்களும் மேற்படி கப்பலுக்கு பாதுகாப்பு வழங்க கூடவே பயணித்து இருந்தன.
