சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் வியாழன் அமெரிக்க சனாதிபதி ரம்புக்கு சீன சனாதிபதி சீ செங்கம்பள வரவேற்பு வழங்கியுள்ளார். ரம்பும் பதிலுக்கு சீயை புகழ்ந்து பாடியுள்ளார்.
ரம்ப் தனது உரையில் “நான் எல்லோருக்கும் இதை கூறுவேன். நீங்கள் ஒரு சிறந்த தலைவர். சிலவேளைகளில் சிலர் நான் இப்படி கூறுவதை விரும்புவது இல்லை, ஆனாலும் அதை நான் கூறுவேன், ஏன் என்றால் அது உண்மை” என்று சீயை புகழ்ந்துள்ளார்.
அத்துடன் தன்னுடன் 30 CEOகள் வந்துள்ளமை “to pay respects to you and China” என்றும் கூறியுள்ளார்.
பின்னர் ஈரான் யுத்தம், சீன-அமெரிக்க வர்த்தகம் போன்ற பாரதூர விசயங்கள் பேசப்படும் பொழுதே முரண்பாடுகள் வெளிவரும்.
