2024ம் ஆண்டு அமெரிக்காவின் முன்னைய சனாதிபதி பைடென் அரசால் இந்திய வர்த்தகர் அதானிக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட ஊழல் மற்றும் இலஞ்ச (corruption and fraud) வழக்கை ரம்ப் அரசு கைவிட உள்ளதாக கூறப்படுகிறது.
அதானி Robert J. Giuffra என்ற ரம்பின் சொந்த சட்டத்தரணியை தனது சார்பில் வாதாட அமர்த்திய பின்னரே ரம்ப் அரசு அதானிக்கு எதிரான வழக்கை கைவிட முன்வந்துள்ளது.
அதானி அமெரிக்காவில் $10 பில்லியன் முதலீடு செய்வார் என்றும், அது 15,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் Giuffra கூறியுள்ளார்.
அதானி மீதான criminal வழக்குகள் கைவிடப்பட்டாலும், அவர் சிறு தொகை தண்ட பணத்தை அமெரிக்க அரசுக்கு செலுத்த கேட்கப்படுவார். அதானியால் மட்டும் அமெரிக்க SEC க்கு $18 மில்லியன் தண்ட பணமும், Treasury க்கு $275 மில்லியன் தண்ட பணமும் செலுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
அதானியின் 5 உயர் அதிகாரிகளும் கூடவே இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளனர். அவர்களும் தண்ட பணம் செலுத்த நேரிடும்.
வழக்கு கைவிடப்படல் இன்னமும் முற்றாகவில்லை.
பிரதமர் மோதி காலத்தில் தீடீரென வேகமாக வளர்ந்தவர் அதானி.
