அமெரிக்க பள்ளிவாசலில் 3 பேர் சுட்டுக்கொலை, சந்தேக நபர்களும் பலி

அமெரிக்க பள்ளிவாசலில் 3 பேர் சுட்டுக்கொலை, சந்தேக நபர்களும் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்து San Diego நகரில் உள்ள இஸ்லாமிய பள்ளிவாசலில் திங்கள் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலுக்கு பள்ளிவாசல் காவலாளியும், மேலும் இருவரும் பலியாகி உள்ளனர்.

தாக்குதலை செய்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 17 மற்றும் 19 வயதுடைய இருவர் அவர்களின் காரில் மரணித்த நிலையில் காணப்பட்டு உள்ளனர். இவர்கள் தம்மை தாமே சுட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்றும் போலீசார் நம்புகின்றனர்.

Islamic Center of San Diego என்ற இந்த பள்ளிவாசல் அந்த நகரத்தில் உள்ள மிக பெரிய பள்ளிவாசல்.

காவலாளியின் நடவடிக்கை காரணமாகவே மிகையான உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டு உள்ளது என்று போலீசார் கூறுகின்றனர்.