Bozalel Smotrich என்ற தற்போதைய இஸ்ரேல் நிதி அமைச்சருக்கு எதிராகவும் International Criminal Court (ICC) என்ற சர்வதேச நீதிமன்றம் கைதுக்காக உத்தரவை வழங்கியுள்ளது.
இந்த செய்தியை Smotrich அவர்களே இன்று செவ்வாய் தெரிவித்துள்ளார். தனக்கு கிடைத்த தகவல்படி இது ஒரு இரகசிய கைது உத்தரவு என்றும் Smotrich கூறியுள்ளார்.
கடும்போக்கு குணம் கொண்ட Smotrich சர்வதேச சட்டப்படி சட்டவிரோதமானது என்று கூறப்படும் Kedumim என்ற ஆக்கிரமிக்கப்பட்ட West Bank குடியிருப்பிலேயே வாழ்கிறார்.
West Bank பலஸ்தீனர் மீதான வன்முறைகளை இவர் முன் நின்று செய்பவர். இவருக்கு அரசியல் ஆதரவு வழங்குவோர் West Bank பகுதியை ஆக்கிரமித்துள்ள யூதர்களே. இவருக்கு எதிராக பிரித்தானியா போன்ற நாடுகளும் தடை விதித்து உள்ளன.
2024ம் ஆண்டு தற்போதைய இஸ்ரேல் பிரதமருக்கு எதிராகவும் ICC கைது கட்டளையை அறிவித்து இருந்தது.
