CIA உட்பட அமெரிக்காவின் 18 உளவு பிரிவுகளுக்கு தலைமை அமைப்பாக இயங்கும் Office of the Director of National Intelligence (ODNI) செயலாளர் (அமைச்சர்) Thulsi Gabbard ஜூன் மாதம் 30ம் திகதி தனது பதவியில் இருந்து விலகுவதாக சனாதிபதி ரம்புக்கு வெள்ளிக்கிழமை கடிதம் வழங்கியுள்ளார்.
தனது பதவி விலகலுக்கு Tulsi தனது கணவனின் புற்றுநோய் தொற்றை காரணம் காட்டினாலும் ஈரான் விசயத்தில் அவர் ரம்புடன் கொண்ட முரண்பாடுகளே உண்மை காரணம் என்று கருதப்படுகிறது.
ஈரான் யுத்தத்தில் Tulsi ரம்புக்கு முரணான பல கருத்துக்களை Tulsi கூறியிருந்தார். கடந்த ஜூன் மாதம் ரம்பும் இஸ்ரேலும் ஈரானை தாக்க முன் அரசியல் புள்ளிகளும், யுத்த விரும்பிகளும் அணு ஆயுத நாடுகளுக்கு இடையில் நெருக்கடிகளை தோற்றுவிக்கின்றனர் என்று சாடியிருந்தார். ரம்ப் அதனால் விசனம் கொண்டிருந்தார்.
ஏற்கனவே ரம்பின் Homeland Security செயலாளர் Kristi Noem, Pam Bondi என்ற Attorney General, Lori Chavez-Deremer என்ற Labor செயலாளர் ஆகியோர் பதவி விலகி அல்லது விலக்கப்பட்டு இருந்தனர்.
