ஏனைய வளர்ச்சியடைந்த நாடுகளை போலவே அமெரிக்காவிலும் பிறப்பு வீதம் வேகமாக குறைந்து வருகிறது.
இரண்டாம் உலக யுத்தம் முடிந்த பின், 1950 களில், அமெரிக்காவில் சனத்தொகை வளர்ச்சி சுமார் 1.8% ஆக இருந்தது. ஆனால் அது தற்போது சுமார் 0.6% ஆக குறைந்து உள்ளது.
இந்நிலை தொடர்ந்தால் 2030ம் ஆண்டில் அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அங்கு இறப்போரின் தொகைக்கு சமனாகும் என்று கணிக்கப்படுகிறது.
2030ம் ஆண்டுக்கு பின்னும் பிறப்பு தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைய, குடிவரவுக்கு அப்பாலான மொத்த அமெரிக்க சனத்தொகை வீழ்ச்சி அடைய ஆரம்பிக்கும். புதிய குடிவராவே சனத்தொகை வீழ்ச்சியை தடுக்கும்.
ஆனால் சனாதிபதி ரம்பின் குடிவரவாளருக்கு எதிரான சட்டங்கள் அமெரிக்க சனத்தொகை வீழ்ச்சியை விரைவுபடுத்தும்.
