Cockroach Janta Party (CJP) என்ற நையாண்டி இணையத்தால் மிரள்கிறது பிரதமர் மோதியின் பாரதீய ஜனதா கட்சி.
CJP ஒரு கட்சி அல்ல. இது தற்போது அமெரிக்காவின் சிக்காகோ (Chicago) நகரில் வாழும் 30 வயதுடைய Abhijeet Dipke ஆரம்பித்த இந்திய அரசியலை நையாண்டி செய்யும் இணையம் மட்டுமே.
ஆனாலும் இந்த இணையத்தை 23 மில்லியன் இளையோர் தொடர்வதால் மோதியின் பா.ஜ. கட்சி மிரண்டு உள்ளது. இந்த 23 மில்லியன் தொடர்வோரில் 95% இந்தியாவில் வாழும் இளையோர். மோதியின் பா.ஜ. கட்சியின் இணையத்தை தொடர்வோரின் எண்ணிக்கை 9.3 மில்லியன் மட்டுமே.
CJP இணையம் இந்திய இளையோரிடையே நிலவும் வேலைவாய்ப்பு இன்மை, சோதனை வினாக்கள் கசிவது போன்ற விசயங்களை பகிரங்கமாக அலசுகிறது.
வேலைவாய்ப்பை பெற முடியாத இளையோரை இந்திய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி Surya Kant அண்மையில் cockroaches என்று அழைத்தமையே மேற்படி இணையத்துக்கு Cockroach Janta Party என்ற பெயரிட காரணம் என்கிறார் Dipke.
CJP இணையம் மீதும், Dipke மீதும் இந்திய அரசு தடைகளை தொடர்கின்றது.
அமெரிக்க Boston University யில் பயின்ற Dipke இந்தியாவின் Aam Aadmi Party யில் social media intern ஆக பணியாற்றியவர்.
