அமெரிக்காவுடனான பேச்சுக்களை ஈரான் இடைநிறுத்தம்

அமெரிக்காவுடனான பேச்சுக்களை ஈரான் இடைநிறுத்தம்

இஸ்ரேல் லெபனான் மீது ஆக்கிரமிப்பை தொடர்வதால் தான் அமெரிக்காவுடன் மேற்கொண்டு வந்த சமாதான பேச்சுக்களை இடைநிறுத்துவதாக ஈரான் இன்று திங்கள் அறிவித்துள்ளது.

பெப்ரவரி 28ம் திகதி முதல் அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாகவே ஈரான் மீது தாக்குதல்களை செய்தன. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இஸ்ரேல் லெபனான் மீதும் தாக்குதல்களை செயது  வந்தது.

ஈரான் மீதான தாக்குதல்கள் அமெரிக்காவும் இஸ்ரேலும் விரும்பிய விளைவுகளை வழங்காத நிலையில் ஈரான் ஹோர்முஸ் கப்பல் பாதையை மூட அமெரிக்கா ஈரானுடன் யுத்த நிறுத்தம் ஒன்றை செய்து நிரந்தர தீர்வுக்கு பேச்சுக்களை ஆரம்பித்தது.

யுத்த நிறுத்தம் காரணமாக ஈரான் இஸ்ரேலை தாக்குவதையும் நிறுத்தியது. ஆனால் இஸ்ரேல் தொடர்ந்தும் லெபனானை கடுமையாக தாக்கி வருகிறது.