குவைத் விமான நிலையம் மீது ஈரான் செய்த ஏவுகணை தாக்குதலால் Terminal 1 பலத்த பாதிப்பை அடைந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஒருவர் பலியாகியும், பலர் காயமடைந்தும் உள்ளனர்.
தாக்குதலின் பின் Terminal 1 சேவைகள் தடைப்பட்டதால் விமான சேவைகள் மெல்ல Terminal 4 க்கு நகர்த்தப்படுகின்றன.
பெப்ரவரி மாத தாக்குதலில் சேதம் அடைந்திருந்த Terminal 1 கடந்த திங்கள் கிழமையே திருத்த வேலைகளின் பின் சேவைக்கு வந்திருந்தது.
ஈரானின் இந்த தாக்குதலுக்கு முன் அமெரிக்கா ஈரானின் Qeshm தீவு மீது தாக்குதல் ஒன்றை செய்திருந்தது.
பஹ்ரைன் மீதும் ஈரான் தாக்குதல் செய்ததாக பஹ்ரைன் கூறியுள்ளது. பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளம் ஒன்றையே தாம் தாக்கியதாக ஈரான் கூறியுள்ளது.
