லெபனான் மீது இஸ்ரேல் தாக்குவதால் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குவதால் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்

ஏப்ரல் மாதத்தின் பின் முதல் தடவையாக ஈரான் இஸ்ரேல் மீது ஞாயிறு ஏவுகணை தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

ஏப்ரல் மாதம் அமெரிக்காவும் ஈரானும் யுத்த நிறுத்தம் ஒன்றை நடைமுறை செய்தபோது இஸ்ரேலும் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி இருந்தது. ஆனால் இஸ்ரேல் லெபனான் மீதான தாக்குதலை தொடர்ந்தது.

ஞாயிறு இஸ்ரேல் லெபனான் மீது பாரிய தாக்குதல் ஒன்றை செய்தது. உடனே ஈரான் வடக்கு இஸ்ரேலில் உள்ள இஸ்ரேலின் Ramat David விமான தளம் மீது தாக்குதலை செய்துள்ளது.

அமெரிக்க சனாதிபதி ரம்பும் இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹூவிடம் ஈரானை தாக்க வேண்டாம் என்று கேட்டிருந்தார். ஆனாலும் இஸ்ரேல் ஈரானை தாக்கி உள்ளது.

அதேவேளை ஈரான் சார்பு யேமென் Houthis குழுவும் இஸ்ரேல் மீது தாக்குதலை செய்துள்ளது.