11% ஐரோப்பியர் மட்டுமே அமெரிக்காவில் நம்பிக்கை 

11% ஐரோப்பியர் மட்டுமே அமெரிக்காவில் நம்பிக்கை 

அமெரிக்கா மீது நம்பிக்கை கொண்ட ஐரோப்பியர் தொகை வேகமாக குறைந்து வருகிறது. தற்போது 11% ஐரோப்பியர் மட்டுமே அமெரிக்கா மீது நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று புதன்கிழமை வெளிவந்த European Council on Foreign Relations என்ற அமைப்பின் ஆய்வு கூறியுள்ளது.

2024ம் ஆண்டில் இத்தொகை 22% ஆகவும், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இத்தொகை 16% ஆகவும் இருந்தது. 

ஐரோப்பிய நாடுகள் தாக்கப்பட்டால் அமெரிக்க படைகள் உதவிக்கு வராது என்றே பெரும்பாலான ஐரோப்பியர் தற்போது கருதுகின்றனர்.

அமெரிக்க ஆயுதங்களை கொள்வனவு செய்வதை தவிர்த்து ஐரோப்பிய உற்பத்தியை அதிகரிப்பதையே தற்போது பெரும்பான்மையான ஐரோப்பியர் விரும்புகின்றனர்.

இந்த கருத்து கணிப்பு 15 ஐரோப்பிய நாடுகளில் கடந்த மாதம் செய்யப்பட்டது.