அமெரிக்கா, ஈரான் யுத்த நிறுத்த மத்தியில் யுத்தம்

அமெரிக்கா, ஈரான் யுத்த நிறுத்த மத்தியில் யுத்தம்

அமெரிக்காவும், ஈரானும் யுத்த நிறுத்தத்தில் இருப்பதாக கூறிக்கொண்டு யுத்தம் செய்கின்றன. அமெரிக்கா இன்று ஈரானின் இரண்டு குடிநீர் சேமிப்பு தாங்கிகளை குண்டு வீசி அழித்துள்ளது.

இதுவரை இரு தரப்பும் மறு தரப்பு மீது சிறு தாக்குதல்களையே செய்து வந்திருந்தன. ஆனால் செவ்வாய்க்கிழமை ஈரானை தாக்கிய அமெரிக்காவின் விலை உயர்ந்த ($25 மில்லியன் பெறுமதியான) Apache வகை ஹெலி ஒன்றை சுட்டு விழுத்தியிருந்தது.

இதற்கு பதிலடியாகவே அமெரிக்கா ஈரானின் இரண்டு குடிநீர் தொட்டிகளை GBU-39 வகை குண்டுகளை வீசி அழித்துள்ளது.

இந்த இரண்டு தொட்டிகளினதும் மொத்த கனவளவு 2,500 கன மீட்டர் என்கிறது ஈரான்.

Geneva Convention சட்டப்படி குடிநீர் தொட்டி போன்றவற்றை அழிப்பது war crime ஆகும்.