Tesla என்ற மின்னில் இயங்கும் கார் நிறுவனம், SpaceX என்ற விண்வெளி நிறுவனம் ஆகியவற்றை ஆரம்பித்த இலான் மஸ்க்கின் (Elon Musk) மொத்த வெகுமதி $1.11 டிரில்லியன் ($1,110 பில்லியன்) ஆகியுள்ளது. இதனால் இலான் மஸ்க் உலகின் முதலாவது டிரில்லியன் வெகுமதி கொண்டவர் ஆகிறார்.
இவரின் வெகுமதி வங்கியில் உள்ளது போன்று திடமான பணமல்ல. பங்கு சந்தையின் வெகுமதி திடீரென பெருமளவில் கூடலாம், குறையலாம்.
2020ம் ஆண்டு $28 பில்லியன் வெகுமதியை மட்டும் கொண்டிருந்த மஸ்க் உலகின் 35 செல்வந்தராக இருந்தவர்.
மஸ்க்கிடம் தற்போது $821 பில்லியன் வெகுமதி கொண்ட 12% Tesla நிறுவன பங்குகளும், $284 பில்லியன் வெகுமதி கொண்ட 42% SpeaceX நிறுவன பங்குகளும் உள்ளன.
