அமெரிக்காவில் Republican கட்சியினரும், Democratic கட்சியினரும் ஒவ்வொரு தம் நாட்டு விசயத்திலும் முரண்பட்டு மோதுவர். ஆனால் இஸ்ரேல் விசயத்தில் மட்டும் இரு கட்சியினரும் ஒன்றுபட்டு இஸ்ரேலுக்கு நிபந்தனை அற்ற, கண்மூடித்தனமான ஆதரவை வழங்குவர்.
ஆனால் காசா அழிவின் பின் அந்நிலை பலமாக மாறி வருகிறது. குறிப்பாக Democratic கட்சிக்குள் பலஸ்தீனர் ஆதரவு அதிகரித்து வருகிறது.
இந்த கிழமை இடம்பெற்ற அமெரிக்க காங்கிரசுக்கான உட்கட்சி தேர்தலில் (primary election) Avila Chevalier, Brad Lander, Claire Valdez ஆகிய மூவரும் Democratic கட்சியின் உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த மூவரும் பலஸ்தீன ஆதரவாளர், இஸ்ரேலை வன்மையாக கண்டிப்பவர். அத்துடன் இந்த மூவருக்கும் நியூ யார்க் மாநகர முதல்வர் Zohran Mamdani ஆதரவு வழங்கி இருந்தார். முதல்வரும் ஒரு பலஸ்தீன ஆதரவு கொண்ட இஸ்லாமியர் இஸ்லாமியர்.
இந்த மூவருக்கும் எதிராக போட்டியிட்டவர்க்கு ஆதரவாக இஸ்ரேல் ஆதரவு குழுக்கள் பெருமளவு பணத்தை செலவழித்து இருந்தும் அவர்கள் தோல்வியை அடைந்துள்ளனர்.
