Texas மாநிலத்தில் அனைத்து மாணவருக்கும் பைபிள் திணிப்பு 

Texas மாநிலத்தில் அனைத்து மாணவருக்கும் பைபிள் திணிப்பு 

அமெரிக்காவின் Texas மாநிலத்தில் கிறிஸ்தவர் அல்லாத அரச பாடசாலை மாணவர்களுக்கும் கட்டாய பைபிள் போதனைகள் படிப்பிக்கப்பட உள்ளது.

அண்மையில் Texas கல்வி திணைக்களம் செய்து கொண்ட தீர்மானப்படி 2030ம் ஆண்டு ஆரம்ப நிலை மாணவர்கள் (elementary school students) முதலில் இந்த கட்டாய பைபிள் திணிப்புக்கு உட்படுவர். பின்னர் படிப்படியாக இது உயர் வகுப்புகளுக்கு நடைமுறை செய்யப்படும்.

Texas மாநிலத்து அரச பாடசாலைகளில் சுமார் 5 மில்லியன் மாணவர்கள் கற்கின்றனர்.

இந்த கிறிஸ்தவ திணிப்பு அமெரிக்க அரசியல் யாப்பில் உள்ள “separation of church and state” விதிக்கு முரணானது.

Texas மாநிலத்தில் வாழும் பாடசாலை மாணவரை கொண்ட அல்லது கொள்ளவுள்ள இந்து, இஸ்லாமிய, புத்த சமய குடும்பத்தினர் Texas மாநிலத்தை கைவிட்டு வேறு மாநிலங்களுக்கு செல்வார்களா அல்லது அடுத்த சந்ததியை கிறிஸ்தவத்துள் கரைய விடுவார்களா?